மாபெரும் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று நானுஓயா ரதல்ல தோட்டத்தில் நடைபெற்றது.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
தோட்டத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் தாங்கள் செய்கின்ற தொழிலினை பாதுகாத்து அதனை மேம்படுத்தும் முகமாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தேயிலை கொழுந்து பறிக்கும் இறுதிப்போட்டி இன்று (25) ம் திகதி நானுஓயா ரதல்ல தோட்டத்தில் நடைபெற்றன.
இப்போட்டியில் ஹேலிஸ் கம்பனிக்கு சொந்தமான தோட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட 39 போட்டியாளரகள்; இறுதிப் போட்டிக்கு கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டிக்கு ஹேலியஸ் கம்பனிக்கு சொந்தமான களனிவெலி வட்டவளை,ஹொரண பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 13 தோட்டங்களில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற தோட்டத்தொழிலாளர்கள் பெறுமதிமிக்க பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட போட்டியாளருக்கு குடும்பத்துடன் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கும் இரண்டாம் கோட்டியாளருக்கு இலங்கையில் சுற்றுப்பபயணம் மேற்கொள்ளவும் மூன்றாம் இடத்தினை பெறுபவருக்கு 40000ரொக்ககப்பணம் பரிசும் பெற்றுக்கொடுக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஹேலிஸ் கம்பனியின் தலைவரும் நிர்வாக முகாமைத்துவ பணிபப்hளரும் மோஹன் பண்டித்கே தலைமையில் நடைபெற்றன.
இப்போட்டிகளுக்கு பெருந்தோட்ட கம்பனி முகாமைத்துவ பணிப்பாளருமான ரொசான் ராஜதுறை உள்ளிட்ட பெருந் தோட்டங்களின் முகாமையாளர்கள் நிர்வாக உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இப் போட்டி நிகழ்ச்சிக்கு இரானுவ மற்றும் பொலிஸார் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டிகள் ஹேலிஸ் கம்பனியின் தலைவர் மோஹான் பண்டிதகே மரம் ஒன்றினை ஆரம்பித்து வைத்து போட்களை ஆரம்பித்து வைத்தார்.
போட்டிகள் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றதுடன் அதில் அதிகூடிய கொழுந்தினை பெறுபவரே இந்த போட்டியில் பெறுவார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -