இவ்வாறு காரைதீவு பிரதேசவைத்தியசாலையின் வருடாந்த ஒன்றுகூடல் வைபவத்தில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றிய கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
இந்நிகழ்வு காரைதீவு வைத்தியசாலையின் மாவட்டவைத்தியஅதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியம் தலைமையில் நேற்றிரவு(25) வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பணிப்பாளருடன் உயிரியல்வைத்தியபொறியியலாளர் இராசையா ரவிச்சந்திரனும் வருகைதந்திருந்தார்.
அங்கு பணிப்பாளர் சுகுணன் மேலும் உiயாற்றுகையில்:
கல்முனைப்பிராந்தியத்தில் சில சுகாதார நிறுவனங்களுக்கு போதுமான அபிவிருத்தி சமமாக இடம்பெறவில்லையென்பதை அவதானிக்கக்கூடியதாயிருந்தது.
எனவே புறக்கணிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட அந்த நிறுவனங்களுக்கு உரிய அபிவிருத்திப்பணிகளைச்செய்துவிட்டு சகல நிறுவனங்களையும் சமமாகப்பார்க்கின்ற பணிதொடரவிருக்கிறது.
காரைதீவு பிரதேசவைத்தியசாலை டாக்டர் ஜீவா தலைமையில் மிகவும் சிறப்பாக செயற்பட்டுவருவதையறிவேன்.எனினும்இங்கு போதுமான அபிவிருத்திகள் செய்யப்படவில்லை. எனவேதான் நான் கதிரைக்குவந்து ஓரிருவாரத்தினுள் சி தரத்திலுள்ள இவ்வைத்தியசாலையை எ தரத்திற்கு உயர்த்த மாகாணத்திற்கு சிபார்சுசெய்திருந்தேன்.
இன்று அது மத்திய அரசுக்கு சென்றிருக்கிறது. மிகவிரைவில் அதற்கான தரமுயர்த்தல் கடிதத்தை நேரில்கொண்டு கையில்தருவேன்.
மேலும் 2020இல் போதுமான நிதிகிடைக்கும் பட்சத்தில் இந்த வெற்றுக்காணியில் 3மாடி கட்டடத்தொகுதியை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யமுடியுமென நம்புகிறேன். அதில் அவசரசிகிச்சைப்பிரிவு விடுதிகள் நிருவாக அலகு பரிசோதனைக்கூடம் என்பன அமையும்.
ஒரு பிரதேசவைத்தியசாலைக்கு எந்தளவு உச்சக்கட்ட வசதிசெய்துகொடுக்கப்படமுடியுமோ அந்தளவிற்கு செய்துகொடுக்கலாமென கருதுகிறேன்.
உங்கள்சுகாதாரசேவையை மேலும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செய்ய வாழ்த்துகிறேன். என்றார்.
அங்கு வைத்தியசாலை சமுகத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. இடமாற்றம்பெற்றுச்சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் பாராட்டப்பட்டார்கள். இடையிடையே விளையாட்டுநிகழ்வுகள் ஊழியர்களின் பிள்ளைகளிடையே நடாத்தப்பட்டு அவ்விடத்திலேயே பரிசுகளும் வழங்கப்பட்டன.