யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வீடுகள் வழங்கி வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கெளரவ காதர் மஸ்தான் நடவடிக்கை.



யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை நிர்மாணித்து வழங்குவதற்காக
தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் கெளரவ.நிமல் லங்ஸா மற்றும் அவரது செயலாளர்,உயரதிகாரிகளுடனான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

கெளரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்புடன் நடந்த இந்த சந்திப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் கொங்ரீட் சட்டக பொருத்து வீடுகளை நிர்மாணித்தல்,இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை நிர்மாணிக்க குடும்பமொன்றுக்கு தலா 100,000.00 ரூபா கொடுப்பனவு வழங்குதல், நீண்டகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடற்றிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைக் காணுதல் என்பன தொடர்பில் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் ராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொங்ரீட் சட்டக வீடுகள் தொடர்பில் எழுந்த புரிந்துணர்வின்மை தொடர்பில் வன்னி மாவட்டத்தின் மூன்று அரச அதிபர்கள்,பிரதேசச் செயலாளர்கள், திட்டப் பணிப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோருடன் வவுனியா மாவட்டச் செயலகத்தில் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் பதுளைக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர் அங்கு அமைக்கப்படும் கொங்ரீட் வீடுகளை பார்வையிட்டதுடன் அவற்றில் சிறு மாற்றங்களை செய்து வன்னி மாவட்டத்திலும் அவற்றை அமைப்பதற்கு பரிந்துரைத்த விடயமும் கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் இங்கே முன்வைக்கப்பட்டதுடன் வடகிழக்கு பிராந்தியத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட 7000 வீடுகளில் 4500 வீடுகளை வன்னி மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்கும் கெளரவ காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் மக்கள் பார்வைக்காக மூன்று மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி வீடுகளை நிர்மாணிக்கவும் கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -