அம்பாறை மாவட்டத்தில் பல காலமாக பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் செயற்பாடு இல்லாத நிலையில்தான் அம்பாரை மாவட்டம் காணப்படுகிறது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அன்னமலை 2 ல் அமைந்துள்ள வேப்பையடி ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை(1) மாலை 5 மணி முதல் 8 மணிவரை வைத்தியபொறுப்பதிகாரி திருமதி டாக்டர் சித்தி ஜாயிஷா அனீஸ் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
அம்பாறை மாவட்டத்தில் கூடுதலாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூடுதலாக நேரத்தை செலவழித்து வருகிறது எதற்காக என்றால் அம்பாறை மாவட்டத்தில் பல காலமாக பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் செயற்பாடு இல்லாத நிலையில்தான் அம்பாரை மாவட்டம் காணப்படுகிறது. அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி ஆகவேண்டும் என்ற அடிப்படையில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம் .அதன் தொடராக அனைத்து தமிழ் பிரதேசங்களுக்கும் சென்று பல கூட்டங்களில் மக்கள் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது காலா காலமாக மக்களை ஏமாற்றுகின்ற ஒரு கட்சி. அவர்கள் மக்களுக்கு எந்தவொரு அபிவிருத்தி பணியை மேற்கொள்ளவில்லை. ஒரு வேலைவாய்ப்பு கூட பெற்று கொடுக்கவில்லை. அரசியல் பலத்தை மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தான் ஏன் பயன்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே பாராளுமன்றத்தில் சென்று அங்கிருக்கும் கதிரைகளை அலங்கரித்து விட்டு வருவதற்காக அல்ல. மக்களின் தேவைகளையும் மக்களின் குறை நிறைகளை அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வினைத்திறனுடன் செயற்பட தான் பாராளுமன்றம் பாராளு மன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.
தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிப்பாடுதான் இன்று நாம் குடிதண்ணீர் இல்லாமல் இருப்பதும் குளங்கள் ஏரிகள் . தூர்வாரப்படாமல் இருப்பதும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு காரணம்.
எங்கள் மக்களுக்கு பெற்று கொடுக்க வேண்டிய விடயங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதும் தேவைகளை பெற்றுக்கொடுத்து அவர்கள் முன்சென்று செய்து கொடுப்பதற்கான சிறந்த தலைவர்கள் இல்லாமல் இருப்பதும் ஆரொக்கியமானதல்ல. இதை இனிவரும் காலங்களில் நாம் சிறந்த முறையில் பயன்படுத்துவோம் நான் உங்களிடம் வெளிப்படையாக கேட்டுக்கொள்கின்றேன். அதற்காகத்தான் நாங்கள் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கி இருக்கின்றோம்.
ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னாபின்னமாக இப்போது உடைந்துள்ளது அவர்களுக்குள் போட்டிகளும் பொறாமைகளும் பிரிவுகளும் வளர்ந்துள்ளது அவர்களே தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் இவர்க்களால் மக்களுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை.
நாம் உரிமை சார்ந்த விடயங்களுடன் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் முன் நகர்த்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம் வெறுமனே உரிமையும் உரிமை என்று போராடிக்கொண்டு எங்களுடைய மக்கள் இருந்ததையும் இழந்து கொண்டு இருக்கின் றார்கள் இந்த இழப்புகளை காப்பாற்ற வேண்டுமென்றால் அரசின் அதிகாரம் நமக்கு வேண்டும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற வேண்டும் அந்த அடிப்படையில்தான் நாம் பல வேலைத் திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகின்றோம்.
இந்த அரசாங்கம் 20 வருடம் மேல் நீடிக்கும் அரசாங்கத்தை பயன்படுத்தி சமூகமாக மாற்றம் பெற வேண்டும் காலாட்டிக் கொண்டு வெற்றி பெறுவதென்பது முடியாது.
அம்பாறையில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை முஸ்லிம் சமூகத்தை நாம் பாராட்ட வேண்டும் அவர்கள் இருந்த அரசாங்கத்தை நன்றாக பயன்படுத்துவார்கள் அவர்கள் அரசோடு இருந்து கொண்டு வளங்களை பெற்று தங்கள் சமூகத்தை வளர்த்துக் கொண்டார்கள் அவர்களைப் பார்த்து நான் பொறாமை படுவது அர்த்தமில்லை நம் தலைமைகள் அரசாங்கத்தை பயன்படுத்த தவறிவிட்டோம் அதை செய்வதற்காகத்தான் அம்பாறையில் இறங்கியிருக்கின்றேன்.
அம்பாறை மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்கின்ற வேளை அம்பாறை பிரதேசத்தில் குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குடிநீர் செல்கின்றது அந்த குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது நான்தான் என குறிப்பிட்டார்.