ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் பெயாவெல் பகுதியில் உள்ள பிரதான வீதியில் இன்று (26) பகல் 1.30 மணி அளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி ஒன்று மோதி விபத்துக்குள்ளாதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கார் ஒன்றும் தலவாக்கலை பகுதியிலிருந்து மெட்டில் கற்கள் ஏற்றிச் டிப்பர் வாகனத்துடன் மோதி கார் வீதியின் குறுக்கே திரும்பியுள்ளது. கார் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து ஏற்படும் போது நுவரெலியாவிலிருந்து காரின் பின்னால் வந்த முச்சக்கரவண்டி வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது காருடன் மோதுண்டுள்ளது.
இதில் பயணஞ் செய்த ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் காரில் பயணித்த ஒருவரும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் காணமடைந்துள்ளனர்.
காரின் சாரதியின் கவயீனமே இதற்கு காரணமென பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதே வேளை காயமடைந்த ஆறு பேரில் பலத்த காயங்களுக்கு உள்ள நான்கு நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இரண்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை உப பொலிஸ் பரிசோதகர் எம்.என்.குமாரசிறி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் இது வரை ஆறு பேர் வாகன விபத்தில் இறந்துள்ளதுடன் 20 மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


