விஞ்ஞான துறையில் கற்ற மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 01 ஆம் நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.

எப்.முபாரக்-
திருகோணமலை ஸாஹிறா கல்லூரியில் விஞ்ஞான துறையில் கற்ற மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 1ம் நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
முஸாதிக்காவின் எதிர்கால கனவு VOG ஆக வந்து இனமத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்ற வேண்டும் என்பதாகும்.

சுருங்க கூறினால் வறுமை கல்விக்கு தடையல்ல என்பதற்கு எடுத்து காட்டு முஸாதிக்கா. இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியின் வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் விஜயம் செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் நேரில் சென்று குறித்த மாணவிக்கும், அம்மாணவியின் பெற்றோருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -