மீராவோடை அல் பலாஹ் ஆட்டோ உரிமையாளர், நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தினால் ஸ்ரிக்கர் வழங்கி வைப்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை அல் பலாஹ் ஆட்டோ உரிமையாளர், நலன்புரி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் ஆட்டோக்களில் சங்கத்தின் அடையாளத்தை காட்சிப்படுத்திய ஸ்ரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு (10) வழங்கி வைக்கப்பட்டது.

ஆட்டோ சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.நூர்தீன் தலைமையில் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி பேசப்பட்டதோடு அதற்கு வருகை தந்த அனைவரும் தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை சங்கத்தின் வளர்ச்சிக்கு வழங்குவோம் என்று உறுதியளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -