நவ காண பஜான் மண்டலி குழுவினரின் பஜனை நிகழ்வு

க.கிஷாந்தன்-
லையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடத்தில் கடந்த காலங்களில் அறுகி வரும் கலைகளுக்கு உயிர் ஊட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் முயற்சியால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக இந்தியா சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள நவ காண பஜான் மண்டலி குழுவினரின் அணுசரனையில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஹோல்புறூக் லக்ஷிமி கலாச்சார மண்டபத்தில் பஜனை நிகழ்வு ஒன்று 29.11.2019 அன்று இடம்பெற்றது.

இதில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட சென்னையிலிருந்து வருகை தந்த நவ காண பஜான் மண்டலி குழுவின் தலைவர் வீணா ரஜேஷ் மந்தேர், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -