அன்னத்துடன் சேர்ந்து கொண்ட சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்..



மூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு....
ஊரின் உலமாக்கள், புத்தி ஜீவிகள், மீனவர்கள் சமூகம், விவசாயிகள் சமூகம், பொது மக்கள், நண்பர்கள் அனைவர்களினதும் வேண்டுகோளுக்கமைய எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ளேன் சமூகத்திற்கு நலனுக்காகவும், நிம்மதியான வாழ்க்கைகாகவும்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கெளரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் மாளிகைக்காடு மண்ணுக்கும் மக்களுக்கும் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி தந்தமையினால் அவர்களின் கட்சி ஊடாக மாளிகைக்காடு மத்தியில் உள்ள எனது ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர்களுக்கு வருகின்ற தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்றினை அவசரமாக ஏற்பாடு செய்திருந்தேன். 

பலருக்கு சொல்ல முடியாமல் போனதையிட்டு மனவருந்துகின்றேன் ஆனால் என்றும் என் உள்ளத்தில் இருப்பீர்கள் உதவிகள் வருகின்ற போது உங்களது காலடியில் தேடி வருவேன் இன்ஷா அழ்ழாஹ்...

இவ் நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் எனது நண்பருமான கெளரவ முபீத் அவர்களும், அம்பாறை மாவட்ட கொள்கை பரபரப்பு செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான ஜுனைதீன் மாங்குட்டி அவர்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்...

சமூகத்திற்கு பிற்பாடே மற்றவையெல்லாம்
ஒன்று படுவோம் வெற்றி கொள்வோம் அழ்ழாஹு அக்பர்...

ஏ.ஆர்.எம்.பஸ்மீர்
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -