புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் ஆதரித்து தேர்தல் காரியாலயம் திறப்பு விழா கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பைறோஸ் அவர்களின் தலைமையில் கல்முனை நகர மண்டப வீதியில் நேற்று(6/11/2019) இரவு நடைபெற்றது.
இதன் போது கலந்துகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் இவ்வாறு கருத்து தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
இது மகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் போல் அல்ல. இந்த ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவமானது எமது ஒவ்வொரு வாக்கும் பெறுதியானது.இதில் 100 வீதம் நாங்கள் வாக்களிக்க வேண்டும்.
எமது ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரமதாசா அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் சுபீட்சம் உறுதிப்படுத்தப்படும் .
இச் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் அன்னம் சின்னத்திற்க்கு வாக்கிளித்து சஜித் பிரமதாசா அவர்களை வெற்றி பெற செய்வோம் என்றார்.
இதன் போது முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி.எச்.எம்.எம். ஹரீஸ்
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில், கல்முனை மாநகர சபை சபை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .