இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறை!



லங்கையில் குற்ற விசாரணை பிரிவால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சிஐடி தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பெய்ரிஸ் மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பில் வழக்கறிஞர் அனுஷா பிரேமரத்னே ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிலுபுலி லங்கபுரா, ரணிலை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2023 ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சொந்த பயணமாக பிரிட்டன் சென்றதற்கு அரசு பணத்தை செலவு செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :