ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், இரு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனரென, அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் தரம் 07இல் கல்வி கற்கும் எம்.எம்.மஹார் எனும் மாணவன், விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றி, கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அத்தோடு, தரம் 08இல் கல்வி கற்கும் எம்.ஏ.மாஜித் எனும் மாணவன், தேசிய மீலாத் சிங்கள மொழிப் பேச்சுப் போட்டியில் பங்குபற்றி, கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று, தேசிய போட்டியில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.