தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் - ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு.

றியாத் ஏ. மஜீட், எஸ்.அஷ்ரப்கான்-

டகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் அனுசரணையில் சென்றல் ரீ.வி மற்றும் சிலோன் மீடியா போரம் இணைந்து நடாத்தவுள்ளது.

இச்செயலமர்வு எதிர்வரும் (12) செவ்வாய்க்கிழமை காலை 9.09 மணி தொடக்கம் மதியம் 12.12 மணி வரை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வுக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மட் வளவாளராக கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல், முடிவுகளை வெளியிடுதல் மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பில் தேர்தல் தொடர்பான சரத்துக்கள், தேர்தல் காலங்களில் ஊடக ஒழுக்க நெறி தொடர்பாகவும் விளக்கமளிக்கவுள்ளார்.

இச்செயலமர்வு 50 ஊடகவியலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயலமர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் தங்களது முழுப் பெயர், விலாசம், தே.அ.அட்டை இலக்கம், செய்தியாளராக கடமையாற்றும் ஊடக நிறுவனம், ஈமெயில், கைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பின்வரும் வாட்ஸ்ஆப் இல: 0772539298 இலக்கத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

செயலமர்வின் இறுதியில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -