கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்டம் மற்றும் பெட்மின்டன் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி முதலாவது இடத்தைப்பெற்று தேசிய மட்ட போட்டிகளில் போட்டியிட தகுதியைப்பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மற்றும் அல் ஹிறா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (3) சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அஹ்மது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சமேளத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் மற்றும் செயலாளர் அஷ்ஷேய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நளீமி), சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்,
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஏ.ரீ.எம்.பாறூக், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சம்மேளனத்தின் உறுப்பினர் என பலரும் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள், பற்றுவித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவித்தனர்.