கல்முனை வரலாற்று சம்பவம்
1988ல் இரவு நேரம் கல்முனை ஹனிபா வீதியில் முஸ்தபாட கடைக்கு முன்னால், பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின் மாமியாரின் வீட்டில் உள்ள கடையறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் நள்ளிரவு தாண்டியும் கொழும்பில் இருந்து வரும் தலைவரைக் காத்துக்கொண்டு மக்கள் நின்றனர், அதில் ஒரு சிறுவனாய் வீதி மணலில் முன் வரிசையில் நானும் அமர்ந்திருந்தேன்,
அது புலிகளின் அராஜக காலம், ஊரில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம், என்ற நிலை ஆனாலும் காங்கிரஸ் கூட்டம் களை கட்டி இருந்தது, இரவு 11:30 தாண்டிய பின்னர் தலைவர் வந்தார் தக்பீர் ஒலிக்க அன்று அவர் SLFP ஒப்பந்தம் முறிந்து, UNP யின் பிரேமதாசவை ஆதரிப்பதறக்கான காரணங்களை பகிரங்கமாக அறிவித்ததுடன் அதற்கான மக்கள் ஆணையை அக்கூட்டத்தில் வந்திருந்த மக்களிடம் வேண்டியும் நின்றார் ,
மக்கள் தக்பீருடன் ஏக மனதாக ஏற்றனர், அதற்காக தலைவர் கொடுத்த உத்தரவாதம், முஸ்லிம்களின் பாதுகாப்பும் ,பாராளுமன்ற , இன விகிதாசாரத்தை 12.5% இருந்து 5% மாக குறைப்பதுமாகும், உள்ளூரில் கட்சியின் வளர்ச்சிக்கான தடைகளை அகற்றுதல் என்பதுமாகும் இது ஒரு சரித்திர நிகழ்வாகும்,
விளைவுகள்
அஷ்ரஃபின் உதவியுடன் பிரேமதாச, ஜனாதிபதியான பின்னர் சிறிய கட்சிகள் நன்மை அடைந்தன, அது மட்டுமல்ல அஷ்ரஃபின் இப் பேரம் பேசல் முழு நாட்டிற்கும் நன்மை யானதாக அமைந்தது, அதனால் பல சிறிய கட்சிகள் நன்மை அடைந்தன அத்தோடு விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரச பாதுகாப்பை பல முறை பெற்றார், அதனால் சமூகம் பெரும்பாலும் நிம்மதி அடைந்திருந்தது,
கிழக்கும் அதன் தலைநகரான கல்முனையும் பாதுகாக்கப்பட்டதுடன் , தனது மக்களையும் கட்சியையும் ஒரு தீர்க்க தரிசனமிக்க தலைவராக இருந்து அஷ்ரஃப் வழி நடாத்தியதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இன்றைய நிலைமை,
நாட்டில் மஹிந்த அரசால் பிரச்சினை என எண்ணி 2015 ல் நல்லாட்சி அரசை நிறுவ மக்கள் தீர்மானித்து முஸ்லிம் கட்சித் தலைவர்களை கட்டாயமாக அழைத்தனர், அதில் இணைந்த கட்சியும், தலைவர்களும், அமைச்சுக்களை அனுபவித்ததுடன் இவ் அரசில் கிட்டத்தட்ட 200 க்கு மேற்பட்ட துயர சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றும் இருந்தது.
ஆனால் , அதற்கான கண்டனத்தையோ, குறித்த மரண, பாதிக்கப்பட்ட வீடு, இடங்களுக்கான நேரடி விஜயத்தை திட்டமிட்டு தவிர்த்த நல்லாட்சி அரசின் ரணிலும், சஜித்தும் , மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தம்மை தயார்படுத்த ஒப்பந்தமின்றிய ஆதரவு கேட்ட வேளை எதுவித மாற்றுக் கருத்தோ, எதிர்ப்பு இன்றி முஸ்லிம் கட்சிகளால் ஆதரவு வழங்க உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் மறைந்த தலைவர் பிறந்த கிழக்கின், வடக்குடனான இணைப்பு, நிரந்தர தீர்வுத் திட்டம், அண்மைக்கால திகண, அம்பாறை, காலி, குருணாகல, மினுவாங்கொடை, தாக்குதலுக்கான நட்டஈடுகள், காப்பு நடவடிக்கைகள் ,
இறக்காம மாயக்கல்லி புத்தர்சிலை, புத்தளம் குப்பை பிரச்சினை, நுரைச்சோலை வீட்டுத் திட்டம், கல்முனைப் பிரிப்பு, பிரதேச செயலக பிரச்சினை காணிப்பிரச்சினைகள், வடக்கு மீள் குடியமர்வு ....என பிரச்சினைப் பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது,
ஆனாலும் இது பற்றிய பேச்சுக்களோ தீர்வோ இன்றி பேச்சு #வெற்றுத்தனமான நட்புறவாக முடிந்துள்ளது, ஆனால் இதுபற்றிய மக்கள் அபிப்பிராயம் தீர்மானத்திற்கு முன்னரோ ,பின்னரோ எந்த வழிகளிலும் அறியப்படவில்லை, இது தலைவர்களின் சுயநல முடிவாக இருக்கலாம் என்ற அச்சமும் மக்களிடையே உண்டு.
ஒப்பீடுகள் அண்மையில் முஸ்லிம் காங்கிரசுக்கும் சஜித்துக்கும் இடையே சந்திப்பு இடம் பெற்றிருந்தது, குறித்த கூட்ட முடிவில் ஐதேக வேட்பாளர் சஜித் "#அஷ்ரஃப் #பிரேமதாசவுக்கு_உதவியதைப்_போன்றதே #இந்த_நிகழ்வும்" எனக் கூறி இருந்தார், ஆனால் இக் கூற்றும், நிகழ்வும் எந்த வகையிலும் அஷ்ரஃபின் சமூக நலனோடோ, சாதூர்யமான முடிவுகளோடோ ஒப்பிடக்கூடியதல்ல, ஏனெனில்
அஷ்ரஃப் அன்று
வெறித்தனமாக பிரேமதாசவை ஆதரிக்க வில்லை, தனது புதிய முஸ்லிம் கட்சியான SLMC யின் எதிர்கால நலனை அவர் கவனத்தில் கொண்டதுடன், , பிரேமதாசவும் அக் காலத்தில் தனது வறுமைக் குறைப்புத் திட்டங்களால் சிங்கள மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட தலைவராக இருந்தார் அதையும் கவனத்திற்கொண்டே அஷ்ரஃப் அம்முடிவை எடுத்திருக்க முடியும்,
அதாவது சிங்கள மக்களால் பெரிதும் விரும்ப்ப்பட்ட தலைவரையே அவர் ஏற்றிருந்தார், அத் தேர்தலில் தமிழர்கள் 'ஒசி அபேகுணசேகரவை' ஆதரித்தனர் , அதனால் SLMC இன்னும் பலமானது, ஆனால் இன்றைய கட்சியின் முடிவு தலை கீழாக உள்ளது.
என்ன செய்திருக்க வேண்டும்??
*இன்றைய பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை UNP யுடன் பேசி ஓரளவாவது உடன்படிக்கை செய்வதுடன், மஹிந்த அணியின் தீர்வுகளையும், கோரி இருக்க முடியும், ஏனெனில் தேர்தல் காலமே சிறுபான்மைக் குரல்களை பெரும்பான்மைத் தலைவர்கள் கவனத்திற் கொள்ளும் காலமாகும்,
* இன்னும் பிரதமராக இருக்கும் ரணில் அரசிடம் முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கான அவசர நிவாரணங்களையும் பெற்ற பின்னர் முடிவுக்கு வந்திருக்க முடியும், அவ்வாறில்லாமல் எடுத்த எடுப்பிலேயே காலடியில் போய் விழுந்தமையானது எமது அரசியல் வாதிகளின் சாணக்கிய காய் நகர்த்தல் இம்முறை குறி தவறிக் குப்பைக் கூடைக்குள் விழுந்துள்ளதாகவே கருத முடியும்,
மட்டுமல்ல அன்றைய அஷ்ரஃபின் சரித்திர நிகழ்வுடன் இன்றைய தரித்திர நிகழ்வை ஒப்பிட்டிருக்கும் சஜித்தின் கூற்றும் அவரது அரசியல் வரலாற்று அறிவின் "#பச்சப்புள்ள " தனமாகவே பார்க்க வேண்டி உள்ளது எனலாம்,
சரித்திர தலைவனின் பாசறையில் வளர்ந்த மக்கள் இத்தரித்திர முடிவுகளைத் தகர்த்தெறியத் தயாராவோம்.
முபிஸால் அபூபக்கர்
கல்முனை