மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி ஓட்டமாவடியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எல்.எம்.ஹனீபாவைப் பற்றி ஆவணத் தொகுப்பு ஒன்றினை வெளியிட மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம் முன்னெடுத்து வருகிறது.
குறித்த ஆவணத் தொகுப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) நாவலடி ஸஹ்வி கார்டனில் வாசகர் வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான ஓட்டமாவடி அறபாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் இலக்கியம், அரசியல், சமூக சேவை, பொழுது போக்கு போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதாக குறித்த ஆவணத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.