ஆறு நாட்களாக உடன் வைத்திருந்த பூதவுடலை கடலில் தூக்கி போட்டோம் : கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்

நூறுள் ஹுதா உமர்-
டந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான றியாஸ் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திடம் நேற்று இரவு 8.00 மணியளவில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்துவிட்டு நேற்று இரவு 11.20 மணியளவில் வீட்டுக்கு வந்தடைந்தனர்

அத்துடன் இவர்களுடன் சென்ற மீனவர் சண்முகம் சிறி கிருஸ்ணண் 10 நாற்களின் பின் இறந்ததாகவும் அவரின் உடலை தாங்கள் 6 நாற்களாக தங்களுடன் வைத்துக் கொண்டிருந்ததாகவும் அதன் பிற்பாடு அவருடைய உடலை தங்களின் மிதக்கும் உடையில் சுற்றி கடலில் விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அத்துடன் அவருடைய பிரிவால் துயறுற்றிருக்கும் அவரின் மனைவி பிள்ளைகள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட அவர்கள்

அவருடைய குடும்ப நிலையினை கருத்திற் கொண்டு வாழ்வாதரத்தைக் மேன்படுத்த மீனவ அமைப்புக்களும் மீன்பிடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மனிதாபிமான முறையில் இன,மத பேதங்களுக்கு அப்பால் அவர்களுக்கு உதவிக்கரம் நீ்ட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த காணாமல்போன மீனவர்களும் அந்த படகும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் கண்டவுடன் கட்டிக் கரைக்கு கொண்டுசேர்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றிய சகோதர இன மீனவர்களுக்கும் அதன் உரிமையாளருக்கும் மற்றும் இரவு பகல் பாரது அற்பணிப்புடன் செயல்பட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தினருக்கும் அதன் முக்கிய நிர்வாகிகளுக்கும் அனைத்து மீனவத் தொழிலாளர்களுக்கும் பொலிஸ், கடற்படை , மற்றும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கும், ஏனைய முக்கிய அதிகாரிகள், ஊடகங்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும் குறித்த படகின் உரிமையாளர்களும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -