கோடிக்கணக்கான பெறுமதி சங்குகளுடன் இருவர் கல்முனை பொலிஸாரால் கைது


பாறுக் ஷிஹான்
லம்புரி சங்கு உட்பட 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதாகியுள்ளனர்.
மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில் வியாழக்கிழமை(10) மாலை குறித்த பொதி ஒன்றுடன் இருவரும் கைதாகினர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்று கைது செய்துள்ளதுடன் இவ்வாறு கைதானவர்கள் அதே இடத்தை சேர்ந்த ஆதம்பாவா (வயது-52) கந்தவனம் ஜீவரத்னம் (வயது-43)ஆகியோரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி மற்றும் 625 கிராம் வலம்புரி சங்கு 1.235 கிராம் 1.505 கிராம் 675 கிராம் 515 கிராம் 1.190 கிராம் உள்ளிட்ட கோடிக்கணக்கான சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கீர்த்தனன்(6873) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -