கினிகத்தேனை பகுதியில் லொறி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதி.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிராதான வீதியில் பிட்டவல பகுதியில் நேற்று 23.10.2019 மாலை லொறி ஒன்று சுமார் 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்Nனை பகுதியிலிருந்து அவிசாவலை பகுதியினை நோக்கிச் சென்ற வெற்று லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் கினிகத்தேனை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக சாரதி நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்விபத்து முன்னால் வருகை தந்த பஸ் ஒன்றுக்கு வழிவிடும் போது வீதியோரம் இருந்து மண் திட்டினையும் உடைத்து கொண்டு குறித்த லொறி குடை சாந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -