சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மத்தியமுகாம் பொலிஸ் நிலையம் லோட்டஸ்ஜிலீபன் சர்வதேச பாலர் பாடசாலையுடன் இணைந்து 'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின விழா இன்று மத்தியமுகாம் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
மத்தியமுகாம் பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பாகாரி பி.ஜீ.பத்மசிறி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜேசிங்க, நோர்வே நாட்டின் பிரதிநிதியாக லோட்டஸ் ஹெல்பேன் நிறுவனத்தின் பணிப்பாளர் விலி பீட்டஸ்ஸன்;, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பாடசாலையின் பணிப்பாளருமான மஞ்சுள பெர்ணான்டோ உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
மூவின மாணவர்களும் பயிலும் இப்பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவு என்பன இணைந்து சிறுவர்களை மகிழ்விக்கும் பல்வேறு வகையிலான விளையாட்டுக்கள், நடனங்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.