பாரிய படையணி ஒன்றை உருவாக்கவே இம்முறையும் அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்- கம்பஹாவில் காவிந்த ஜயவர்தன


ஐ. ஏ. காதிர் கான்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக, கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய கூட்டமைப்பு ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக, விசேட சம்மேளனம் ஒன்றையும் நடாத்தி கூட்டமைப்பின் வேட்பாளரை முன்னிறுத்தவுள்ளோம். இதனை, வெற்றிக்கான கூட்டமைப்பாக மாற்ற அனைவரும் ஒரு பொதுத் தீர்மானத்திற்கும் வந்துள்ளோம்.
கொள்கைக் கட்டமைப்பில் தேசிய பிரச்சினைக்கான ஒரு தௌிவான தீர்வொன்றினையும் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். வேலைவாய்ப்புப் பிரச்சினை, பொருளாதார மற்றும் அனைத்துப் பிரச்சினைகளும் கொள்கை அறிவிப்பில் உள்ளடக்குவதற்கு உத்தேசித்துள்ளோம்.
சஜித் பிரேமதாஸ நிபந்தனைகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக எவரும் கூறவில்லை. கட்சியின் ஜனநாயகக் கட்டமைப்பில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முன்பு இருந்தே குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சியினுள் சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், அவை கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தலில் "அன்னம்" சின்னத்திலேயே போட்டியிட்டது. இதன்பிரகாரம், பாரிய விரிவான படையணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், இம்முறையும் "அன்னம்" சின்னத்தில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாஸ களத்தில் இறங்கியுள்ளார் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -