ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்புல்லாஹ விஜயம்!

னாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ‎எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று வெள்ளிக்கிழமை (2019.10.18) ‎மட்டக்களப்பு, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்தார்.
ஏறாவூர் ஓட்டுப் பள்ளி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முதலில் விஜயம் செய்த ‎அவர், அங்கு ஜும்ஆ தொழுகைக்கு பின் பொது மக்களுடன் ‎கலந்துரையாடினார். ‎
பின்னர், தனது நிதியொதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 400 ‎வருடங்கள் பழமை வாய்ந்த ஏறாவூர், ஆத்தங்கரை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ‎விஜயம் செய்ததுடன், அங்கு தனது நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு ‎வருகின்ற பள்ளிவாசல் மதில் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார். ‎
அதனைத் தொடர்ந்து ஏறாவூர் ஹதீஜா பள்ளிவாசல் நிர்வாகத்தின் ‎வேண்டுகோளுக்கு அமைய அங்கு விஜயம் செய்த ஹிஸ்புல்லாஹ், ‎பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அதேபோன்று, தனது நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டு வரும் அல்- அக்ஸா வடிவிலான ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்து அதன் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -