பதிவு செய்யுங்கள்: இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும்


ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேசதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் 21.10.2019 திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
பங்கேற்பாளர்களுக்கான ஆசனங்கள் 300 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வில், 16 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட முஸ்லிம் இளைஞர் மற்றும் யுவதிகள் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள முடியும்.

இந்நிகழ்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறும்.

1. இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு (பி.ப. 4:00 – பி.ப. 7:00)
(இதில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்)
2. சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் இராப்போசனமும் (பி.ப. 8:00 – 9:30 மணி)
(தலைமைத்துவ செயலமர்வில் கலந்துரையாடப்பட்டு தயாரிக்கப்பட்ட
கேள்விகள் தொகுக்கப்பட்டு 2ஆம் அமர்வில் முன்வைக்கப்படும்)

நாடளாவிய ரீதியிலுள்ள இளைஞர்கள், யுவதிகள் இந்நிகழ்வில் பங்குபற்ற முடியும். இதற்காக கீழுள்ள இணைப்பில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து, 18.10.2019 வெள்ளிக்கிழமை பி.ப. 4 மணிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும். பதிவு செய்பவர்களின் தொலைபேசிக்கு ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கான பதிவிலக்கத்தை அறியத்தருவதுடன் உங்கள் ஆசனத்தை உறுதிப்படுத்துவார்கள்.

குறிப்பு: பங்கேற்பாளர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது.

பதிவுகளுக்கு: bit.ly/2MMCMfi

மேலதிக விபரங்களுக்கு: 0112436752 (ஸக்கி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -