அஸ்ரப் ஏ சமத்-
சபா SAFA உளவளதுனை ஆலோசனை மையம் 2015ஆம் ஆண்டு இலங்கையின் முஸ்லிம் மேம்பாட்டு பெண்கள் பிரிவின் அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றது. இதற்கென தலைமைக் காரியாலயமொன்றும் களுபோவில வைத்தியசாலை இயங்கி வருகின்றது. இந் நிலையம் ஒர் அரச சார்பற்ற ஒரு தனியார் நிறுவனமாகும். இதன் பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸதபாவின் பாரியார் திருமதி அமீனா பாயிஸ் முஸ்தபா தலைமை வகித்து நாடு பூராவும் வாழும் குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு தொழில்பயிற்சியளித்து அவர்களை தாமாகவே சுயதொழில் முயற்சியில் ஈடுபடுத்தி அவர்களுக்குஉதவி வருகின்றார். இந் நிறுவனமானது தொழில் பயிற்சிமட்டுமல்லாது பல்வேறு நோக்கங்களை கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பாடசாலைவிட்டு விலகிய அல்லது பாடசாலைக் கல்வியினை இடை நடுவில் விட்ட இளம் பெண்களுக்கு ஆங்கிலம், ஆடைஅலங்காரம், சிகை அலங்காரம், உணவு உற்பத்தி, கனனி திருமணப் பெண் ஆடை அலங்காரம், ஆடைகளுக்கு சாயமிடுதல், பாலர்பாடசாலை பயிற்சி உளவளத்துறை போன்ற பல்வேறு தொழிற்பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றது. இத்துறையில் வீடுகளில் தங்கியிருக்கும் யுவதிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் இந் நிறுவனம் உதவி வருகின்றது.. இப் பயிற்சிநெறிகளில் நாட்டில் உள்ள மூவீனங்களையும் சார்ந்த பெண்களும் இனைக்க்பபட்டு; பயிற்றுவிக்கப்படுகின்றனர். சுமார் 10க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. . இதனால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பெரிதும் நன்மையடைந்து வருகின்றனர்.
இவ் நிறுவனத்தின் ஒரு திட்டமிடல் அங்கமாகத்; தான் திருமணத்திற்கு முன் பின் பெண்கள் ஆண்களுக்குமான ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனது. அந் நிகழ்ச்சித் திட்டத்தினை திருமண முடிக்க உள்ள இளைஞர் யுவதிகளை சந்தித்து அவர்களை ஒன்று திரட்டி திருமண பந்தத்தில் நாம் எவ்வாறு தமது வாழ்க்கை ஆரம்பிததல் விட்டுக் கொடுத்தல் ஜோடிகள் சிறு சிறு பிரச்சினைகளுக்காக வாழ்க்கையை முறித்துக் கொள்ளாமல் இருப்பது. மூன்றாம் நபரின் தலையீட்டினால் வாழ்க்கை முறிவு, தமது இன்பகரமான வாழ்க்கையை சீராக விளங்கி நீண்ட வாழ்க்கை முறை குழந்தை பாராமரிப்பு போன்ற ;திட்த்தினை “சபா” எனும் உப அமைப்பு நடாத்திவருகின்றது. பல்வேறு பிரதேசங்களில் உள்வளத்துணையாளர்களை ஒன்று சேர்த்து டொட் பயிற்சிகள் நடைபெறுகின்றன. தேசிய சமூக அபிவிருத்p நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவருமான திருமதி அஸ்மியா சகீட் அவர்களின் தலைமையின் கீழ் உள்ள உளவளதுனையாளர்களின் கீழ் இத் தி;ட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
இவ் திட்டமானது திருமணத்திற்கு முன் பின் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு காரணம் ஆண்களும் பெண்களும் என்ற வித்தியாசம், அவர்கள் கட்டாயம் தமது எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வது பற்றி அறிவின்மை போன்ற மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர். இன்று உலகம் ஒரு கிராமம் என்று அழைக்கப்பட்டாலும் பலதுறைகளின் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் அபாரித வளர்ச்சி கண்டிருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் மனதளவில் பின்னடைவைக் கண்டு வருவதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். குடும்ப வாழ்வில் சிதைவு தனி நபர் உருவாக்கத்தை வெகுவாக பாதித்துள்ளது.
இதனால் ஆரோக்கியமான ஆளுமைகள் உருவாக்குவது அரிதாகி வருகின்றது. குடும்பங்களில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்து வருகின்றது. மகிழ்சிகரமான குடும்பங்களையும் தேட வேண்டியிருக்கின்றது. அன்மையில் மேற்கௌ;ளப்பட்ட ஆய்வொன்றில் 10 வீதமான குடும்பங்களே மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும் 20 வீதமான குடும்பங்கள் சில சர்ந்தர்ப்பங்களில் மாத்திரம் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும் எஞ்சிய 70 வீதமான குடும்பங்கள் மகிழ்ச்சியின்றி அல்வது வாழ்வின் ஒரு மகிழ்ச்சியோ நிம்மதியின்றி ஏதோ என வாழ்ந்துவருகின்றதாக கெப்பி லைப் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புள்ளி விபரம் இன்று நடைபெறும் விவாகரத்துக்கள் இந்த ஆய்வின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றது. அடிப்படை மாற்றங்கள் நடைபெறாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை என நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். எனவே குடும்பங்களில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவது அவசியமானது என நாம் கருதுகின்றோம்.
நல்ல குடும்பங்கள் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவது அவசியமானது என நாம் கருதுகின்றோம். நல்ல குடும்பங்கள் உருவாக்கப்படாதபோது நல்ல தனி நபர்கள் உருவாக்கப்படுவது சாத்தியமற்றது. இந் நிலையில் சிறந்த தலைமுறைகளை உருவாக்குவது வெறும் கனவாகவே இருக்கும். எனவே முஸ்லீம் சமுகத்த்தில் எதிர்காலமும் மனித இனத்தின் விமோசனமும் நல்ல குடும்பங்களிலேயே தங்கியுள்ளன. எனது பார்வையில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் மூலமே குடும்பத்தில் மாற்றங்களையும் அதன் அடியாக சமூக மாற்றங்களையும் உருவாக்க முடியும். அவை
கனவன் மனைவி உறவை பலப்படுத்தும் வகையிலான ஆறோக்கியமான குடும்பங்களை மகிழ்ச்சியானதொரு குடும்பமாக உருவாக்குவோம். இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைகளின் போது நாம் வாழ்க்கை வழிமுறைகளை கையாளல் வேண்டும். என்ற அறிவையும், அனுபவத்தையும் இந்த சபா ஆலோசனை மூலம் நாடளாவிய ரீதியில் செய்து வருகின்றன. அவையவன
1.திருமணம் ஒரு அறிமுகம் -திருமணம் எனும் பந்தத்துக்குள் எவ்வாறு வாழவேண்டும். வாழ்க்கையின் தாற்பரியம் என்னவென்று அறிய ஒரு கணவன் மனைவியின் திருமண பந்தம் எவ்வாறு அமைதல் வேண்டும்.
2.தொடர்பாடல் - திருமண பந்தத்திலின்போது தொடர்பாடலின்றி ஒரு வாழ்க்கை இல்லை. இப் பந்தத்தின்போது மொழி நடைகளை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும். என்ற நடவடிக்கைகளை கற்றுக் கொடுத்தல்
3.சுய விழிப்புணர்வு – சுயவிழிப்புணர்வும், முதிர்ச்சியும் என்னைப் பற்றிய எனது பலம், பலயீனம், எது என அறிந்து கனவன் மனைவியின் பினைப்பபையும் மனைவி கணவனின் உளமாற்றங்களை அறிந்து கொள்ளல்
4. தனிநபர் வேறுபாடுகள் -கனவன் ஒரு துருவமும் மனைவி மற்றொரு துருவம் இரண்டு துருவங்களும் ஒன்றாக இனையும் போது அவர்களது முரண்பாடுகளை எவ்வாறு அனுகமுடியும் என ஆலோசித்தல்
சமுகத்தில் வாழும் எந்தவொரு தனிநபரினதும் பாதுகாப்பையும் பராமரிப்பையும் குடும்பமே முதலில் உத்தரவாதம் செய்கிறது. குடும்பத்தில் முக்கிய கதாபாத்திரம் கணவன் மனைவில் உறவே இவர்களின் வாழ்க்கையின் அடிப்படையான தேவைகள் நிலைகுலையும்போது அவர்களின் பொறுமையும் நிலைகுலைந்து விடுகின்றது. இதன் விழைவு மிக மோசமானதாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனைக் கட்டுப்படுத்துத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் சபா ஆலோசனை மையமானது பல்வேறு தரம் வாய்ந்த வளவாளர்களை கொண்டு வழிகாட்டல் நிகழ்ச்சிகளை செய்து வருகின்றது.
இதுவரை ககோட்டவிட்ட ,மல்வாi;ன , கொழும்பு, அக்குரனை ஆகிய பிரதேசங்களில் திருமணம் சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வுகள் நடைபெற்று வருகி;ன்றது.
அதில் ஒன்றுதான் 24.08.2019 அன்று அக்குரனையில் நடாத்திய “மனவாழ்வு மகிழ்வுடன்” என்ற தலைப்பின் கீழ் உளவலத்துனை கருத்தரங்கு நடைபெற்றது. அன்று வளவாலர்களாக திருமதி அஸ்மியா சகிட், பணிப்பாளர் சபா ஆலோசனை மையம், மனஉளர்ச்சி சுகாதர சிகிச்சைப்பிரிவு, வைத்தியர் றிசாதா புகாரி பயிற்சியாளர் குடும்ப சுகாதார மனவளாத்துனைப்பிரிவு, திருமதி சாமிளா கவுன்சிலர், மற்றும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியை தொகுத்தவர் திருமதி பர்ஹான கபூர் கவுன்சிலர், இது போன்று பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை ஏற்பாடுகள் செய்து நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கண்டியில் பதியுத்தீன் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலையில் - முஸ்லிம் பெண்கள் வின்ங் மண்டத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவுகளுக்கு அழையுங்கள் பர்ஹான கபூர் 0774725576 அல்லது 0767180207
இதே போன்ற இன்னும் பல நிகழ்;ச்சித் திட்டங்களை பல பிரதேசங்களில் நடத்துவதற்கு நடாத்த விரும்பின் எமது தெஹிவளை உள்ள தலைமை அமையத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் சபா கவுன்சிலிங் நிலையம் 0720115115 அல்லது 011-2827117