அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் ஆசிரியர்
தின விழா சிரேஷ்ட மாணவர் எம்.ஜே.எம். சக்கி தலைமையில் (07) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சலீம் றமீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், ஆசிரியர் பணி மிகவும் புனிதமானதும் கௌரவமானதுமாகும். இதனை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுபோன்றுதான் கல்விக்காக பணி செய்கின்ற ஆசிரியர்
களையும் நாம் வாழ்நாள் முழுவது மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும்.
ஆசிரியர் பணி வேறு பதவிகள் போன்றல்ல. எந்த நேரமும் மாணவர்களின் கல்வி தொடர்பான சிந்தனைகளிலே இருப்பார்கள். தனது மாணவர் கல்வியிலும், ஏனைய விடயங்களிலும் உயர வேண்டும் என்றே சிந்திப்பார்கள். கல்வி விடயத்தில் யார் களவு செய்கின்றார்களோ அவ்வாறானவர்களை இறைவன் பார்த்துக் கொள்வான்.
எனவே, ஆசிரியர்களை மாணவர்கள் மாத்திரமல்ல பெற்றோர்களும் ஏனையோர்ககளும் மதிக்கின்ற தன்மை ஏற்படவேண்டும் எனவும் சலீம் றமீஸ் மேலும் தெரிவித்தார்.
இங்கு மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலை இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ், அதிபர் ஏ.எம்.எம். இத்ரீஸ், பிரதி அதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான் உட்பட ஆசிரயர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.