திருகோணமலை நகர சபைக்குட்பட்ட மூன்றாம் கட்டை டிப்போ வீதியை இணைக்கும் குறுக்கு வீதியானது பயணம் செய்ய முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்களும் பாடசாலை மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
மழை காலங்காளில் சேரும்,சகதியுமாக காணப்படுவதோடு,நடுவீதியில் சேற்று நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமம்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.