ஜனாதிபதி சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் என்பதில் எது வித சந்தேகமும் கொள்ள தேவையில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சந்திப் சமரசிங்க தெரிவிப்பு.

எப்.முபாரக்-
னாதிபதி சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் என்பதில் எது வித சந்தேகமும் கொள்ள தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சந்திப் சமரசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை சுமேதகம பகுதியில் திருகோணமலை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சரத் லியனகே தலைமையில் இன்று(5) காலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
நாட்டு மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்கவே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு,வாழ்க்கை செலுவு குறைப்பு,எரிபொருள் விலை குறைப்பு,மற்றும் அன்றாட பொருட்களின் விலைகளும் கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.நாட்டில் சஜித் பிரேமதாஸவிற்கு மக்கள் அழைஅழையாக திரண்டு விட்டார்கள் நிச்சயமாக புதிய ஜனாதிபதி சஜித்தே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் திரண்டுள்ளார்கள் ஹக்கிம்,றிஷாத்,மனோகணேசன்,திகாம்பரம் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் சில சிறிய கட்சிகள் அனைத்தும் சஜித்தின் வெற்றிக்காக முன்வந்துள்ளார்கள்.
பொது ஜன பெரமுனைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் வெள்ளை வேன் கலாச்சாரம் மற்றும்,ஊடக படுகொலைகள் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கு நமது வாக்கு அமைந்து விடக் கூடாது என்றார்.
இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பலரும் கலந்து கொண்டார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -