ஓட்டமாவடி - மீராவோடை கூட்டுறவு கிளை வீதியில் வசித்து வரும் பாறூக் (வயது 47) என்பவரின் இரு சிறுநீரகமும் பழுதடைந்து காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நோயாளிக்கு மூன்று மாதத்திற்குள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியதை அடுத்து சகோதரர் பாறுக் அவர்களுக்காக நிதி திரட்ட குழுவொன்று அமைக்கப்பட்டு சிறப்பாக அவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்திர சிகிச்சையை மேற்கொள்ள நாற்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்கள் தேவை என்று செய்தித் தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்ததை பார்வையிட்ட சகோதர சகோதரிகள் உதவிகளை செய்துள்ளனர்.
இதுவரை சுமார் இருபது இலட்சம் ரூபாய் நிதி கிடைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளி பாறூக் எமக்குத் தெரிவித்தார். அத்தோடு உதவிகளை செய்த அத்தனை உள்ளங்களுக்கும் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பிரார்த்திப்பதாக தெரிவித்த அவர், சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இன்னும் இருபத்திரெண்டு இலட்சம் நிதி தேவைப்படுகிறது என்றார்.
சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள வைத்தியர்கள் வழங்கிய திகதியின் அடிப்படையில் இன்னும் ஒன்றரை மாதம் உள்ளமையால் குறித்த தொகையினை அவசரமாக சகோதரர் பாறூக் எதிர்பார்க்கின்றார்.
எனவே உதவிகள் வழங்க முடியுமான உள்ளங்கள் அவசரமாக உதவிகளை வழங்கி சகோதரரின் சிகிச்சை சிறப்பாக இடம்பெற்று ஆரோக்கியத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ஏ.எல்.எம்.யூ.எஸ்.சபீனா. (நோயாளியின் மனைவி)
1124 5607 9994 (சம்பத் வங்கி, ஓட்டமாவடி கிளை)
தொடர்புகளுக்கு – 0779962008