வன இலாகா அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் முறுகல்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் வன இலாகா அதிகாரிகளுக்கும் - பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (01) செவ்வாய்க்கிழமை வன இலாகா அதிகாரிகள் சேனைப் பயிர்ச்செய்கை செய்கின்ற இடத்துக்குச் சென்று அங்கு சேனை பயிர்ச் மேற்கொள்ள வேண்டாம் எனவும் இது அரசுக்குரிய காணி எனவும் தெரியப்படுத்தியதையடுத்துடன் அரச காணியென அடையாளப்படுத்த கல் போட முற்பட்ட போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களது வீடுகளுக்குப் பின்னால் உள்ள சிறிய காடுகளை துப்புரவு செய்து சோளப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் தற்போது கடமையில் உள்ள வன இலாகா அதிகாரிகள் சேனை சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாமென பயமுறுத்தி வருவதாகவும் சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாங்கள் சேனைப் பயிர்ச் செய்கையை வாழ்வாதார தொழிலாக செய்து வருவதாகவும் அவர்களுக்கு வேறு எவ்வித தொழிலும் இல்லாத நிலையில் வன இலாகா அதிகாரிகள் தங்களை பயமுறுத்தி வருவதாகவும் இதனை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

30 வருட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சேனைப் பயிர்ச்செய்கையை செய்வதற்கு அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமெனவும் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான ஆரியவதி கலப்பத்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன் பல வருடகாலமாக செய்துவந்த சேனைப் பயிர்ச்செய்கை செய்வதற்கு இடம் அளிக்குமாறும் எதிர்காலத்தில் பிரதேச செயலாளரின் உதவியைப் பெற்று சேனைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து வன இலாகா அதிகாரிகள் அவ்விடத்தைவிட்டு சென்றதுடன் பொதுமக்களும் கலைந்து சென்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -