வெள்ளிக்கிழமை கோத்தாவுக்கு கோவிந்தாவா ?


அரசியல் ஆய்வாளர் நிலாமுடீன்-

நாளை மறுதினம் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஒரு தடை உத்தரவு வருகின்றதா ?
கோத்தாபயவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்றும் நாளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் தற்போது கொழும்பு -12 புதுக்கடை உயர் நீதிமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போது விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
மஹிந்த அணியின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், சிறிலங்காவின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோத்தாபய ராஜபக்ச பெற்றுக் கொண்டது சட்டவிரோதம் என்றும், அவை செல்லுபடியற்றது எனவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை, கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டதரணிகளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மனுவை விசாரிக்கும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவில் யசந்த கோத்தாகொட, அர்ஜூன ஒபேசேகர, மகிந்த சமயவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில் முதல் இரண்டு மனுதாரர்களான குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.
.ஆரம்ப அமர்வின் போது, 2019 இல் கோத்தாபய ராஜபக்சவுக்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை வழங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் வஜிர அபேவர்த்தன, உள்நாட்டு விவகார அமைச்சின் செயலர் காமின் செனிவிரத்ன,குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் , ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் நாள் காலை 9 மணி தொடக்கம், 12 மணிவரையும் அதிபர் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை ராஜாகிரிய தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான ஏதேனும் தடை உத்தரவுகள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால், வரும் திங்கட்கிழமை அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாமல் போய் விடும்.

அனேகமாக கோத்தாவுக்கு தடை உத்தரவு கிடைக்க மிக அதிக வாய்ப்புள்ளது.அப்படியொரு நிலை வந்தால் மகிந்தர் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் .
இலங்கை அரசியலில் மிகப்பெரிய தளம்பல் ,மாற்றம் வந்திடுமா ? பார்ப்போம்!.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -