சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.றஸீட் காக்கா இன்று (2019.10.05) காலமானார்கள். அன்னார் பிரதேச நலன் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் சிந்திப்பவர். கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலின்போது எனது வலது கையாக செயற்பட்ட அன்னார், என்னுடன் இணைந்திருந்த காலத்தில் பிரதேச அபிவிருத்தி மற்றும் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அடிக்கடி கலந்துரையாடுவார்.
அல்ஹாஜ் அகமட்லெப்பை அவ்வாஉம்மா ஆகியோரின் புதல்வரான மர்ஹூம் ஏ.எல்.றஸீட் காக்கா, சமீராதாத்தாவின் கணவரும் 6 ஆண் பிள்ளைகளினதும் 3 பெண் பிள்ளைகளினதும் தந்தையுமாவார்.
அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்துக்கு எவ்வளவு வேதனையைத்தருமோ அதைப்போன்ற கவலையை நானும் அனுபவிக்கின்றேன்.
அன்னாரது நல்லடக்கம் நாளை இடம்பெறவுள்ளது. அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க பிராத்திக்கின்றேன் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயரபீட உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -