பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் மகா தந்திரவாதி ரணில் வைய்யா..
கோத்தாபாயவின் இந்த துரும்பு சீட்டை வைத்துக் கொண்டுதான் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று ரணில் வைய்யா வரிந்து கட்டிக் கொண்டு ஒற்றைக்காலில் நின்றார்.
ஆனால் இந்த கிங் மேக்கர் மங்கள சமரவீர இந்தியா அமெரிக்காவிடம் போட்டுக் கொடுத்து ரணிலுக்கு ஆப்பு வைத்து ரணிலின் கனவுக்கு சாவுமணி அடித்து விட்டார்.
எனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்க கூடாது.!.( UNP க்குள் )
அதனால் கோத்தாவின் கேஸ் புஷ்வாணம் ஆகியது.சஜித்தைக் கொண்டு நீங்க ஜனதிபதியாக்கணும் . நான் பிரதமர் கேட்டு உங்கட்ட கெஞ்சிக்கூத்தாட வேண்டும் >
வழக்கில் ரணில் ஒரு வீதம் கூட கரிசனை காட்டவில்லை .வழக்கு திசை திருப்பப்பட்டது .அவ்வளவுதான் >.
இப்போது சஜித் வெற்றி பெற முடியுமா ?
இந்த தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிகையில் யாரும் வெற்றி பெற முடியாது என்று கடந்த 2 ஆண்டுகளாக பல நேர்காணல்களில் சொல்லி வருகின்றோம் .
அதன்படி இரண்டாவது சுற்றில்தான் ஜனாதிபதி வெற்றி தீர்மானிக்கப்படும் .
அப்படிப் பார்க்கும் போது சஜித் வெற்றி பெறுவது கடினம் ..அங்கும் ஒரு ரகசிய வில்லங்கம் ரணில் செய்வார்.
வாக்குகள் பல பங்குகளாக பிரிவதால் சஜித் வெற்றி ஊர்ஜிதமல்ல.
ரணில் தானாக விரும்பி சஜித்துக்கு விட்டுக் கொடுக்கவில்லை..வெளிநாட்டு அழுத்தங்கள் உள்வீட்டுக் குடைச்சல். ஆகியவற்றின் காரணமாகவும் சஜித் UNP க்குள் இருந்து ஒரு பெரிய அணியை பிரித்து செல்லும் நோக்கம் இருந்ததால் ரணிலுக்கு வேறு வழி இல்லை .
ரணிலின் அந்திம கால ஆசையில் மண் போட்டு தட்டிப்பறித்து விட்டார்கள் .
வெளிநாட்டு அழுத்தங்கள் இருந்தாலும் அவைகளை உதாசீனம் செய்து விட்டு களமிறங்கி இருக்கலாம் ஆனால் சஜித் UNP க்குள் இருந்து ஒரு பெரிய அணியை பிரித்து செல்லுவாரானால் ரணிலால் வெற்றி பெற முடியாத நிலை அதாவது மண் கவ்வும் நிலை அதனால் சஜித்துக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சவால் நிலைமை .
சஜித் தனி வளி சென்றால் ரணிலுக்கு எதிரான மிகப்பெரிய அலை ஐதேக க்குள் இருந்து கிளம்பி இருக்கும் .
இதை முறியடிக்க வேண்டும் என்றால் ஒரே வழி சஜித்துக்கு விட்டுக் கொடுப்பது போன்று விட்டுக் கொடுத்து போட்டியில் மண்கவ்வ வைப்பது ?
ரணிலுக்கு வேறு வழி இல்லை
கோத்தபாய என்ற ஒரு இனவாத வேட்பாளருக்கு சஜித் சவாலே கிடையாது .அதனால் கோத்தா ஜனாதிபதியானால் ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவர் . அப்போ சஜித் நிலைமை அம்பி முன்னாள் வேட்பாளர் என்று வீட்டில் அமர்ந்து விட வேண்டியதுதான் >>
ரணிலுக்கு தேவையான சகலதும் கோத்தபாய செய்து கொடுப்பார்.
ரணிலுக்கு வேறு வழி இல்லை .
சஜித் அம்பி ! யாருக்கிட்ட எங்கிட்டயா ? வெற்றி பெற்றுக் காட்டுங்கோ !...