அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கட்சி தாவிய மூத்த ஐக்கிய தேசிய கட்சி போராளி


கில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த போராளி கிண்ணியா பெரியாற்று முனையை சேர்ந்த ஏ.டபிள்யூ. சவுக்கத்தலி.. அவர்கள்
கிண்ணியாவில் வியாழக் கிழமை (24)இடம் பெற்ற கூட்டமொன்றின் போதே இவ்வாறு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் ஆகியோர்களின் முன்னிலையில் வைத்து உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்...
இவர் ஐக்கிய தேசிய கட்சியில் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளதோடு கட்சியின் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்..
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப்,இராஜாங்க அமைச்சரும் தவிசாளருமான அமீர் அலி,கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்,திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -