அரிசிமலை காணி வழக்கு தள்ளுபடி அன்வர் உட்பட மூவர் வழக்கிலிருந்து விடுதலை

புல்மோட்டை அரிசிமலையிலுள்ள புல்மோட்டை பிரதேச மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தோட்டக்காணிகளை அரசிமலை விகாரை அண்டிய பகுதிகளை சுமார் 500 ஏக்கருக்கு மேல் புனித பூமி திட்டத்தின் கீழ் அள விட முற்பட்ட வேளையில்
புல்மோட்டை பிரதேச மக்கள் 2014ம் ஆண்டு தமது காணிகளை அளவிடமுடியாது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நிள அளவையாளர்களை தடுக்க முற்பட்ட வேளையில் புல்மோட்டை மற்றும் திருகோணமலை இதர பிரதேசங்களில் இருந்து பொலிஸார் குவிக்கப்பட்டு அளவிட முற்பட்ட வேளையில் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது
பின்னர் குறித்த இடத்தில் நின்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,குச்சவெளி பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.பி.தௌபீக்,புல்மோட்டை பெரிய பள்ளிவாசல் தலைவர் கலீல் லெப்பை மற்றும் அனைத்து பள்ளிகள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி ஐயூப்கான் போன்றோர் மீது பொலிஸாரை தாக்கியதாகவும் பொலிஸ் கடைமைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகவும் புல்மோட்டை பொலிஸாரால் 2014 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து வழக்கு தொடரப்பட்டு மேலதிக அறிவுறுத்தலுக்காக அட்டர்னி ஜெனரல் அவர்களுக்கு அனுப்பப்பட்டு சுமார் 5 வருடங்களின் பின்னர் இன்று (25) புதன் நீதிமன்றுக்கு அட்டர்னி ஜெனரல் அவர்களால் அனுப்பப்பட்ட அறிக்கையில் சாட்சியங்கள் விளக்கங்கள் பொலிஸாரால் அளிக்கபடாததால் குச்சவெளி சுற்றுலா நீதிமன்றால் அன்வர் உட்பட மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

இதற்காக அன்றில் இருந்து குறித்த நால்வருக்கும் கொடுப்பனவு இல்லாமல் சமூகத்திற்காக நீதி மன்றில் வாதாடிய சட்டத்தரணிகளான முஜீப்,நிப்றாஸ்,லாஹிர்,ரிஸ்வான் மற்றும் ஸாதாத் போன்றோருக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் நன்றிகளை தமது மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -