அஸ்ரப் ஏ சமத்-
வின்ஸ் ஸ்பயா சர்வதேச உயா் கல்வி நிலையத்தில் உயா் தர டிப்ளோமா மற்றும் டிப்ளோமா பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தவா்களுக்கு டிப்ளோமா மற்றும் பட்டம் வழங்கும் நிகழ்வு வத்தளை நகர மண்டபத்தின் கூட்ட மண்டபத்தில் இந் நிலையத்தின் பணிப்பாளா் காலாநிதி பாத்திமா நஸ்ரின் பசீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சட்டத்துறை பேராசிரியா் கமால் கருநதாச கலந்து கொண்டாா். அத்துடன் கௌரவ அதிதியாக புரவலா் காசீம் உமா் , மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பிணா் மொகமட் பாயிஸ் , ஜக்கிய நாடுகள் இலங்கைச் சங்கத்தின் துாதுவா் கலாநிதி எம்.எம். ரசுகனுடீன் இந் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் பசீன் ஆகியோறும் கலந்து கொண்டு டிப்ளோமா சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனா்.