தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அரசாங்கம் வேலைவாய்ப்புக்கள் வழங்குவதாக குற்றச்சாட்டு..

ஐ. ஏ. காதிர் கான்-

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில், அரசாங்க வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்குள் அவ்வாறான ஆறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, பெவ்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மொணராகலை பகுதியில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை, தமது அமைப்பிற்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சில அரச நிறுவனங்களில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிச்சந்திர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -