கல்வி அமைச்சில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அதிபர் நியமனம் அங்கு தெரிவித்ததாவது:
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் வகுப்பு புதிய அதிபர்கள் 2000பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான நிகழ்வினை எம்மால் நடத்த முடியாவிடினும் அவர்களுக்கான நியமன பத்திரங்களை பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 2015இல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 4000அதிபர்களை பாடசாலை கட்டமைப்பில் இணைத்துக்கொண்டோம். இதுவரையான காலப்பகுதியில் 6000புதிய அதிபர்களை பாடசாலை கட்டமைப்புக்காக இணைத்துக்கொண்டுள்ளோம். மேலும் அதிபர்களுக்கான பதவி உயர்வுகளையும் முறையாக முன்னெடுத்துள்ளோம். இது கல்வி அமைச்சின் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இதற்கு மேலதிகமாக அருகிலுள்ள பாடசாலை சிறந்தப பாடசாலை திட்டத்தின் ஊடாக பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். நகர பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்கி வருகின்றோம். மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகளையும் நாம் பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.