கல்குடா இஹ்ஸான் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த மரக்கன்று வழங்கும் நிகழ்வும், உலக அமைதி தினமும் (27) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஐ.எம். அன்வர் மதனி தலைமையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான், மயிலங்கரச்சை ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் முஸ்லிம், குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு அங்கு வருகை தந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இன நல்லிணக்கம் தொடர்பான உரைகளும் சர்வமதத் தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் தியாவட்டவான் 210 C கிராம உத்தியோகத்தர் எம்.ஜௌபர், கல்குடா இஹ்ஸான் சமூக சேவைகள் அமைப்பின் பதில் பணிப்பாளர் எம்.ஐ.எம். நவாஸ் மௌலவி சர்வமதத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.