!!.மட்டக்களப்பில் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் வரலாறு படைக்கும் அமீர் அலி……!!


 ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
பிவிருத்திகள் எனும் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்குகாலம் படங்களை திரையிட்டு வரும் முகவரி இல்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கல்குடாவின் அரசியல் தலைமையும், இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் சிந்தனையின் மறுவடிவமாக பின்னால் வருகின்ற சந்ததியினரும் பயனடையும் வகையில் நிலையான அபிவிருத்தி எனும் பயனத்தில் சுமார் 350 மில்லியனுக்கும் அதிகாமான தொகையினை ஒதுக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பயிச்செய்கையில் தாக்கம் செலுத்தி வந்த நீர் பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் பாரிய புணரமைப்பு திட்டம் ஓரிரு நாட்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக கல்குடா பிரதேச தமிழ் பேசும் இரண்டு சமூகங்களையும் சேர்ந்த விவசாயிகளின் பெரும் பிரச்சனையாகவும், மிக நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்து வந்த வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேச சபை, கிரான் பிரதேச செயலகம், முறுத்தானை கிராம சேவகர் பிரிவு, மினுமினுத்தவெளி மேற்கு விவசாய கண்டத்தினை நிருவாக மற்றும் விவசாய எல்லைகளாக கொண்டு காணப்படும் விலால் ஓடைக்கான அணைக்கட்டுக்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வருடா வருடம் மழை காலத்தில் புனாணை மேற்கில் உள்ள விவாசாயிகள் 35000க்கும் அதிகாமான மண் மூடைகள் சுமந்து குறித்த விலால் ஓடையில் அணைகட்டியே தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய துர்பாக்கிய நிலைமையினை எதிர் நோக்கி வருகின்றனர்.
இப்பிரச்சனையானது தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் மாவட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் புணானை மேற்கு விவசாயிகளின் நீண்ட கால தீர்க்கப்படாத பிரச்சனையாக குறித்த விலால் ஓடை அணைக்கட்டு இருந்து வந்தது. பொதுவாக மாதுறு ஓயாவில் இருந்து நீரினை பெற்று விவாசாயத்தினை மேற்கொள்ளும் குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் 15 வருடகால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமகவே நிலையான அபிவிருத்தி எனும் தூர நோக்கு சிந்தனையின் மறு வடிவமாக 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ள விவாசய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் குறித்த செயற்பாடானது கல்குடா மற்றும் புணானை மேற்கு விவசாய சமூகத்தினால் அழிக்க முடியாத வரலாற்று பதிவாக பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் கள்ளிச்சை, வடமுனை, ஊத்துச்சேனை, கிடச்சிமடு கிழக்கு மற்றும் கல்குடா பிரதேசத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த 4000 க்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவதோடு விவசாய நீர்வழங்கள் சம்பந்தமாக குறித்த பிரதேசங்களில் இருந்து வந்த இரண்டு இனங்களுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளுக்கும், விவசாயம் சமப்ந்தமான ஏனைய பிரச்சனைகளுக்கும் இதனால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளமையும் முக்கிய விடயமாகும்.
அதனோடு சேர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் மற்றும் செங்கலடி பிரதேச விவசாயிகளின் நீர்ப்பிரச்சனைக்கும், குடிநீர் பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக செங்கலடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கித்துல் மற்றும் றூகம் எனும் பாரிய இரண்டு குளங்களை இணைக்கும் நிலையான பாரிய அபிவிருத்திக்காக சுமார் 150 மில்லியன் ரூபாய்கள் அமைச்சர் அமீர் அலியினால் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளும் ஓரிரு நாட்களில் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மூன்றாவதாக பொத்தானை பிரதேச விவசாய கண்டத்தில் காலாகாலமாக கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் உயிராபத்தினை ஏற்படுத்துல் நிலையில் காணப்பட்ட அக்குறானை மூக்குறையான் குளத்தோட்டை பாலத்தினை அமைப்பதற்காவும் சுமார் 5.5மில்லியன் ரூபாய்களை இராஜாங்க அமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
குறித்த மூக்குறையான் குளத்தோட்டை பாலமானது மட்டக்களப்பு கல்குடா தொகுதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவில் கொழும்பு மட்டக்களப்பு – புனாணை பிரதான வீதியில் இருந்து பொத்தானை காரையடிப்பட்டி ஊடாக அக்குறாணையினை சென்றடையும் மூக்குறையன் குளத்தோடை பாலமானது இது வரைக்கும் அமைக்கப்படாமல் மனித உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடக்கும் நடை பாதை பாலமாக மரங்களை கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டடு காணப்படுவதானது மனதினை நெகிழ வைக்கும் விடயமாக இருந்து வருகின்றது.
காஞ்சிலங்காடு, அக்குறாணை கண்டம், மினுமினுத்தவெளி கண்டம், போன்ற விவசாய கண்டங்களில் இருந்து வேளாண்மை செய்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகள் தங்களினுடைய போக்குவரத்து வசதிகள் இன்மையினால் கிரான் பொண்டுகள் சேனை ஊடாக சுமார் 25 கிலோ மீற்றர் சுற்றிவளைத்து பயணிக்க நேரிடுகின்றது. அது மட்டுமல்லாமல் மழை காலத்தில் குறித்த ஓடையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதினால் விவசாயிகளினுடைய பயணங்கள் முற்றாக தடைப்படுகின்றது.
மேலும் முதலைகள், யானைகள், கொடிய விச பாம்புக்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விவசாயிகள் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் அதே நேரத்தில் மாணவர்கள், வயோதிபர்கள், நோயாளிகள் என பலரும் குறித்த பாலம் அமைக்கப்படாமையினால் உயிர் அச்சுறுத்தல்களுக்கும், இன்னோரன்ன கஸ்டங்களுக்கும் முகம் கொடுக்க நேரிடுகின்றது. இருந்தும் பல தசாப்தங்காளாக மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் எந்த அரச நிருவாகிகள் மற்றும், அரசியல் தலைமைகளும் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் இருப்பது குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற விவசாய சமூகத்திற்கு செய்கின்ற பாரிய துரோகமாகவே பார்க்கப்படுகின்றது.

25 கிலோ மீற்றர் சுற்றிவளைத்து பிரயாணம் செய்வது ஏழு கிலோ மீற்றருக்குள் சுருக்கப்பட்டு மக்களினுடைய நாளாந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு அபிவிருத்தியின் வேகம் அதிக்கப்படும் என்பதற பிரச்சனைகளை பலதரபினராலும் இராஜாங்க மைச்சர் அமீர் அமீர் அலியிடம் முன்வைக்கப்பட்டத்தினால் 5.5 மில்லியன் ரூபாய்கள் செலவில் குறித்த மூக்குறையான் குளத்தோடை பாலம் திருத்தி அமைக்கப்படுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஒரு சில நாட்களுக்குக்குள் அதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இவ்வாறான இராஜாங்க அமைச்சருடைய தமிழ் முஸ்லிம் சமூகங்களை மையப்படுத்திய தூர நோக்கு சிந்தனையுடனான நிலையான அபிவிருத்திகளை நோக்கிய பயணத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் மிக முக்கிய பிரச்சனையாக உள்ள மேலே குறிப்பிட்ட மூண்ரு வகையான நீர்ப்பிரச்சனைகளுக்குமான முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தினை பார்க்கின்ற பொழுது அபிவிருத்திகள் எனும் பாணியில் தங்களுடைய அரசியல் விற்பனர்களினதும், காலத்துக்கு காலம் ஜால்ராபோடும் பிரதேச சபை உறுப்பினர்களினதும் பக்கட்டுக்களை நிரப்பி வாக்குகளை சுவீகரிக்கும் மாவட்டத்தில் உள்ள படம் காட்டும் அரசியல்வாதிகள் யார் என்பதனை தமிம், முஸ்லிம் சமூகம் இனம் கண்டு தூய்மையான அரசியல் தலைமைகளின் கீழ் செயற்படுவதற்கான காலத்தின் கட்டாய தேவையில் மட்டக்களப்பு வாழ் சமூகம் இருக்கின்றது என்பது மட்டுமே உண்மை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -