காரைதீவுக் குப்பைகளை இனிமேல் அட்டாளைச்சேனையில் கொட்டமுடியாது.ஆளுநர் முன் தவிசாளர் நபீல் தெரிவிப்பு:




கல்முனையில் கொட்டவேண்டிவரும் எச்சரித்தார் தவிசாளர்ஜெயசிறில்.
காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு பிரதேசசபை எமது சபைக்கு நிலுவiயாகவுள்ள சுமார் 15லட்சருபா தரவேண்டியிருப்பதால் எமது சபைத்தீர்மானத்தின்படி அவர்களது குப்பைகளை இனிமேல் நாம் எமது பகுதியில் கொட்டஅனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வுh முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசசபைத்தவிசாளர் எ.எல்.அமானுல்லா நபீல் தெரிவித்தார்.
தவிசாளர்களுக்கான கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றது. அங்குரையாற்றிய தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிடுகையில்:
தவிசாளர் அமானுல்ரா குறிப்பிடுவது உண்மை. அதேபோல் எமது சபைக்கு கல்முனை மாநகரசபை சுமார் 30லட்சருபா தரவேண்டும். அதைத்தந்தால் அட்டாளைச்சேனைக்கு மறுகணமே 15லட்சருபாவை வழங்கமுடியும்.
அதற்காக கல்முனை மாநகரசபைக்கு பலதடவைகள் கடிதம் போட்டு சபைத்தீர்மானம் எடுத்து அதனையும் மேயர் முதல் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பிஎவ்வித பதிலும் வராதகாரணத்தினால் இறுதியில் மேயரைச்சந்தித்துக் கலந்துரையாடினோம்.

அதன்போது அங்கு இதுதொடர்பாக எவ்வித ஆவணமும் இல்வை என்று பதிலளித்தார். அப்படியெனின் அங்கு மாநகரசபை நடக்கிறதா? மார்க்கட் நடக்கிறதா? என்று கேட்கவிரும்புகிறேன்.
எனவே அட்டாளைச்சேனை எமது குப்பைகளைக்கொட்ட தடைவிதித்தால் எமது குப்பைகளை கல்முனை மாநகரசபையில் கொட்வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அதன்போது கல்முனை மாநகரசபைமேயர் சமுகமளிக்கவில்லையாதலால் ஆணையாளர் கலந்துகொண்டிருந்தார்.

ஆணையாளர் அன்சார் பதிலளிக்கையில்: இதற்காக ஒருகுழு போட்டுள்ளோம். அது ஆராய்ந்து 45தினங்களுள் உரியதீர்வை வழங்கும்.அதுவரைபொறுத்திருங்கள் என்றார்.
அதன்படி அட்டாளைச்சேனைத் தவிசாளரும் காரைதீவுத் தவிசாளரும் தத்தமது தீர்மானங்களையும் அதுவரை தளர்த்தியுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -