நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் கவிதை அரங்கம்(Photos)

பாறுக் ஷிஹான்-லாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின்கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் உலக கவிதை தினத்தை முன்னிட்டு நடாத்தும் தேசிய கலையின் உணர்வு மிக்க ரிதம் என்ற தொனிப்பொொருளுக்கமைவாக "மனிதனாக மீட்டெழுவோம் " என்ற தலைப்பில் கவியரங்கம் செவ்வாய்க்கிழமை (20) நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.அக்கிலா பானு ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமை தாங்கியதுடன் சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜன் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.என் றின்சானும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் 8 க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றி தத்தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.கவியரங்கின் நடுவர்களாக கவிஞர் மருதமுனை விஜிலி, ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எம்.பி.ஏ ஹசன் ,கவிஞர் அக்கரைப்பாக்கியன், கவிஞர் ஏ.ஓ அனல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -