மௌலவி ஆசிரியர் நிமனம் குறித்த கலந்துரையாடல்


ல்லாயிரம் மௌலவிகள் தமது கற்கையினைத் திறம்பட முடித்து உரிய பரீட்சைகளை எழுதி ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதி பெற்றிருந்தாலும் இது வரையில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குவதில் காட்டப்படும் அக்கறையின்மை பலரை நிராசைகொள்ளச் செய்துவிட்டது. கடந்த காலங்களில் போதியளவுக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமையும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதே நேரம் மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டமையும் இந்நியமன முன்னனெடுப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசியர்களின் தேவையும் வெற்றிடமும் இருந்தும்கூட முஸ்லிம் அரசியல்வாதிகளின் முறையான திட்டமிடல் மற்றும் தகவற்றிரட்டு இன்மையால் அந்த வாய்ப்பு நழுவிப் போகும் ஒன்றாகவே மாறி இருக்கின்றது.
குறைந்த பட்சம் ஐந்நூறு மௌலவிகளையாவது ஆசியர்களாக நியமிக்கச் செய்யும் திட்ட அறிக்கயைதை் தயார் செய்வதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் ஆகஸ்ட் 31 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு இல 520, செகன்ட் டிவிசன், மருதானை எனும் முகவரியில் அல் இம்தியாஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.
மௌலவிப் பட்டமொன்று பெற்றிருப்பதோடு அல்ஆலிம் பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். கடந்த முறை நியமனத்துக்காகப் போட்டிப் பரீட்சை எழுதி சித்தியடைந்த போதும் நியமனம் பெற முடியாது போன மௌலவிகளும் மௌலவியாக்களும் அவசியம் தமது தகவல்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் வேண்டப்படுகின்றார்கள். சுயாதீன ஆலிம்கள் மேம்பாட்டுச் சங்கம் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது

எதிர்வரும்காலங்களில் மௌலவியாக்களுக்கான ஒன்றுகூடலைச் செய்வதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது. அது பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும.
மேலதிக தொடர்புகளுக்கு 0112678236, 0112678235 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -