ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேலைத்திட்டத்தின் கிழ்
நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவின் கிழ் 320 எல் வெஞ்சர் கிராமசேவகர் பிரிவு நோர்வுட் வெஞ்சர் தேயிலை
தொழிற்சாலை பிரிவில் புதிய யோகட் தயாரிப்பு நிருவனம் ஒன்று
உருவாக்கபட்டுள்ளது .
அதன் முதல் ஆரம்பகட்ட நிகழ்வு நோர்வுட் சின்ன எலிபடை தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபத்தில் யோகட் அறிமுகபடுத்தும் நிகழ்வு
20.08.2019.செவ்வாய்கிழமை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி
ரோசிபிட்டா சேவியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகனபுஸ்பகுமார நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் திட்டமிடல் உதவிபணிப்பாளர் திருமதி ஏ.எம.ஜயசூரிய அட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளர் ஏ.சரவணபவன் கிராம உத்தியோகத்தர் பொகவந்தலாவ
பிரதேசத்திற்கு பொருப்பான பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கணேசன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
புதிதாக தயாரிக்கபட்ட புதிய யோகட் வகையினை பிரதம அதிதிகளுக்கு
வழங்கிவைக்கபட்டமையும் குறிப்பிடதக்கது.










