கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக எம்.ஐ. ஜாபீர், இன்று (09) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான ஜாபீரிற்கான நியமனக் கடிதத்தினை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம். சலாஹுதீனால் முன்னாள் இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் முயற்சியினால் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் சிபாரிசுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனம் தொடர்பிலான முயற்சிகளை முன்னாள் இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம் ஹரீசுடன் இணைந்து கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் றிப்தி முஹம்மட்டும் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -