நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட நான்காம் பிரிவு தேயிலை மலையில் முனி சாமி சிலையும் கருப்பு சாமி சிலையும் பிரதிஷ்டடை செய்யும் வைபவமும் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்வைபவமும் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில்; கறுப்புச்சாமி,முனுசாமி ஆகிய சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு பால்குட பவனி இடம்பெற்றதுடன் பாலாபிசேகம் நீராபி சேகம் ஆகிய இடம்பெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இதே குறித்த ஆலய பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பௌத்த கொடி நாட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் அமைதியற்ற சூல்நிலை ஏற்பட்டதுடன் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் இ.தோ.காதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான், இதொகா பொதுச் செயலாளர் திருமதி அனுஷா சிவராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி. சக்திவேல்,கனபதிகணகராஜ் , இதொகா பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமாண், நுவரெலியா பிரதேச சபை தலைவர்வேலு யோகராஜ், அக்கரப்பத்தனை, பிரதேசசபை தலைவர் சுப்பிரமணியம் கதீர் செல்வன், நோர்வூட் பிரதேச சபைதலைவர் குழந்தை ரவீ , நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராம் வினோஜி உட்பட தோட்ட பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.


