இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பெண்களில் நிக்காப் முகமூடுதலை தடைவிதிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ எவ்வித உரிமையும் கிடைாயது .இது எங்களது மத கலாச்சார உரிமை சாா்ந்ததாகும். மற்றும் இஸ்லாமிய மத ஓழுக்க விழுமியக் கோட்பாடாகும் இவ் விடயத்தில் ஏனைய நாடுகள் போன்று எமக்கும் இந்த நாட்டில் நிக்காப் அணிய எமது பெண்களுக்கு உரிமை உண்டு அதனை நீதி அமைச்சா் தலாத்தா அத்துகோரள அமைச்சரவைப் பத்திரம் சமா்ப்பித்த அதனைச் நிரந்தர சட்டமாக்கி நிக்காப் அணிதலை நிறுத்த முடியாது.
கடந்த வாரம் சமா்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தினை ஜனாதிபதியிடமும் அமைச்சா் தலத்தா அத்துக்கோரலவிடமும் ஒரு வாரம் பின்போடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இவ் விடயம் சம்பந்தமாக பிரதமரும் கலந்துரையாடுவதாகவும் அமைச்சா் ரவுப்ஹக்கிம் தெரிவித்தா். இவ்வாறு நிரந்தரமாக சட்டம் கொண்டுவரப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. என அமைச்சா் ரவுப் ஹக்கீம் அங்கு குறிப்பிட்டாா்.
அதே போன்று முஜிபு ரகுமன், மரைக்காா் பா.உறுப்பினர்களும் எமது மதம் கலாச்சாரம் விவாகரச் சட்டம் சம்பந்தப்பட்ட விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எதனை முன் வைக்கின்றதோ அதற்காக 20 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சொல்கின்றதோ அதனையே நாம் அணைவரும் இணைந்து அரசிடம் முன்வைப்போம். அதனை மிஞ்சி அரசாங்கம் செயற்பட்டால் அதற்காக குரல் கொடுப்போம் அதனை தடுப்போம். எனக் கூறினாா்கள்.
.முன்னாள் ஆளுனா் அசாத் சாலி தனது உரையில் ஒரு நாள் நடந்த உயிா்த்த ஞயிறு சம்பவத்திற்கும் மட்டக்களப்பு கெம்பஸ், நிக்காப் , மத்தரசா கல்வி விடயங்களில் பிரதமருக்கோ ஜனாதிபதிக்கோ முஸ்லிம்களது மதத்தில் கைவைப்பதில் இங்கு உரிமை இல்லை பிரதமர் உயிா்த்த ஞாயிறு தினத்தின் மறுநாளே மத்ரசா மற்றும் மட்டக்களப்பு கெம்பஸ் போன்ற விடயங்களில் சட்டம் கொண்டு வருகின்றாா். எனக் குறிப்பிட்டாா்.அவருக்கு இவ் விடயத்தில் கைவைப்பதற்கு அதிகாரம் கிடையாது ? இது எமது உரிமை சம்பந்தப்பட்டது. அத்துடன் கொழும்பு கண்டி பள்ளிவாசல்கள் அமைப்பினரால் முன் மொழியப்பட்ட நிக்காப் விடயத்தில் இந்த அரசாங்கம் கைவைக்கக் கூடாது. என நிறைவேற்றப்பட்டது அவ் அறிக்கை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கப்பட்டது
முன்னாள் இராஜாங்க அமைச்சா் எச்.எம் ஹரீஸ் - முஸ்லிம்களின் மதம் மட்டுமல்ல கிழக்கில் உள்ள முஸ்லிம்களது இருப்பிடங்களிலும் கைவைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகரம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது அதனை பிரிப்பதற்கும் அரசு முனைகின்றது. வாழைச்சேனை ,தோப்புரிலும் இந்த அரசு தமிழ்த் தேசிய முன்னணியினரருக்கு இந்த அரசு சோரம் போகியுள்ளது. முஸ்லிம்களது இருப்புக்களை பிரித்து வேறாக்க முனைகின்றது. ஆகவே ஜனாதிபதித் தோ்தல், மாகாணசபைத் தோ்தல், பாராளுமன்றத் தோ்தல்கள் இருக்கின்றது. ஆகவே முஸ்லிம் விவகாரத்துச் சட்டம், நிக்காப் முஸ்லிம்களது இருப்பிடப்பிரச்சினைகளை இத் தோ்தல்கள் முடியும் வரை கைவிடுவதே இந்த அரசாங்கத்திற்கு சாலச் சிறந்ததாகும். எனக் குறிப்பிட்டாா்.
ஜம்மியத்துல் உலமாத் தலைவா் றிஸ்வி முப்தி இந்த அரசாங்கத்தினது காலத்திலேயே முஸ்லிம்களது பல பிரச்சினைகளும் சோதனைகளும் ஏற்பட்டது.. முஸ்லிம்களை அவா்கள் மீள துண்பத்திற்கு கஸ்டத்திற்குள்ளாக்கினால் முஸ்லிம்கள் எதிா்காலத்தில் அரசியல் தலைமைகள் பற்றி மீளச் சிந்திக்க வேண்டி வரும். நமது பிரச்சினைகளை அல்லாவிடமே நாங்கள் ஓதி அழுது துஆக் கேட்போம். என துஆவும் ஓதப்பட்டது.









