திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்மந்தன்,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களது இணைத் தலைமையில் இன்று (30) இடம் பெற்று வருகிறது
அபிவிருத்தி தொடர்பான மதிப்பீடுகள் ,எதிர்கால திட்டண்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ஷான்விஜயலால் டீ சில்வா, துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்,திருகோணமலை மாவட்ப நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்மந்தன், சன்டித் சமரசிங்க,கே.துறைரட்ணசிங்கம் ,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உட்பட அரச உயரதிகாரிகள்,திணைக்களத் தலைவர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.