இந்நூல்வெளியீட்டுவிழாவிற்கு பிரதமஅதிதியாக கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறப்புஅதிதிகளாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கல்முனைவலய விவசாயபாட ஆசிரியஆலோசகர் கே.செல்வராஜா பாடசாலையின் பிரதிஅதிபர் பா.சந்திரேஸ்வரன் உதவிஅதிபர் எம்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
பணிப்பாளர் மன்சூர் அங்கு உரையாற்றுகையில்:
இவ்வாறானதொரு கனதியான புத்தகம் வெளிவருவதுகண்டு அகமகிழ்வடைகிறேன். கிழக்கு மாகாணத்திலுள்ள 1314 பாடசாலைகளில் எந்தப்பாடசாலையாவது மண்ணின்றிய விவசாய மாதிரிச்செய்கையை காட்சிப்படுத்த முன்வந்தால் அதற்கு உதவத்தயார்.
இந்தமண்ணிலே பிறந்த வித்தகர் விபுலாநந்தஅடிகள் ஆக்கிய யாழ்நூலைப்படிப்பதற்கு பௌதீகஅறிவு தமிழறிவு போன்றஅறிவுகள் தேவை. யாழ்நூல் என்றால் யாழ்ப்பாணத்தைப்பற்றிய நூல் என்று கருதியவர்களுமுண்டு. யாழ் என்றஇசைக்கருவியை நுண்ணியதாக ஆராய்ந்துஎழுதியநூல் அது. அவர் பெற்றபட்டங்கள் பல. தமிழிலே விஞ்ஞானத்திலே கணித்தத்திலே சமஸ்கிருதத்திலே பாண்டியத்தியம் பெற்ற ஒருவராக அவர் திகழ்ந்தார்.
அதுபோல இந்த நூலாசிரியர் விஜயபவான் பெற்ற பட்டங்கள் பல. அத்தனையும் உழைத்துப்பெற்றவை. பாராட்டுக்கள்.
மாணவர்கள் புத்தகம் வாசிக்கும்பழக்கத்தை கட்டாயம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இணையத்திலே தேடிப்பெறலாம் என்பது உண்மை.
ஆனால் மின்சாரம் உபகரணம் ஆசனம் போன்ற இன்னோரன்ன வசதிகளில்லாமல் படிக்கக்கூhய வாசிக்கக்கூடியவசதி புத்தகத்திலேமட்டும்தான் உள்ளது. விரும்பியநேரத்திலே விரும்பிய இடத்தில் எவ்விதசெலவுமின்றி அந்த அறிவை இந்த நூலிலிருந்துபெறலாம் எனவே வாசிப்கை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
இந்த ஸ்மார்ட் அறையைகுறுகியகாலத்துள் நவீனமாக்கிய அதிபர் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். என்றார்.
நூல் விமர்சனஉரையை கல்லூரி ஆசிரியை திருமதி அருந்தவவாணி சசிகுமார் நிகழ்த்த வாழ்த்துரைகளை சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கல்முனைவலய விவசாயபாட ஆசிரியஆலோசகர் கே.செல்வராஜா ஆகியோர் நிகழ்தினர்.
நூலாசிரியருக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் பொன்னாடைபோர்த்திக் கௌரவித்தார். பணிப்பாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
லங்காபுத்தகசாலை வெளியிடும் இந்தநூல் நூலாசிரியர் வேலுப்பிள்ளை விஜயபவானின் மூன்றாவது நூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



