ஓடாத மானும் போராடாத இனமும் வாழமுடியாது ! தமிழருக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவது ஏன்?


காரைதீவு நிருபர் சகா-

ஓடாத மானும் போராடாத இனமும் வாழமுடியாது என்பது கருத்து. எனினும்தாயகத்தில் தொடர்ச்சியாக போராடும்இனமாக தமிழினம் மாறியிருப்பதும் அரசு அதனைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அதிர்ச்சியாகவுள்ளது.
இவ்வாறு காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் (15) பொத்துவில் கனகர்கிராமமக்களைச்ந்தித்து கருத்துவெளியிடுகையில் கேள்வியnழுப்பினார்.
பொத்துவில் 60ஆம்கட்டைகனகர் கிராமமக்கள் தாம்வாழ்ந்தகாணியைக்கோரி நிலமீட்புப்போராட்டத்தை நடாத்தி நேற்றுடன் ஒருவருடமாகிறது. அதனையொட்டி அங்கு சென்ற தவிசாளர் ஜெயசிறில் கொட்டிலில் இருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.

அவர் மேலும் கூறியதாவது:
நீங்கள் யானையோடும் நுளம்போடும் மலைப்பாம்போடும் போராடி இங்கு மழையிலும்வெயிலிலும் கிடந்து துன்பப்படுகிறீர்கள்.

365நாட்களைக்கடந்தும் தங்களின் நியாயமானபோராட்டத்திற்கு தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை எனும்போது மிகவும் வேதனையாகவிருக்கிறது.இந்தநாட்டில் தமிழருக்கு மட்டும் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்?

நான்இங்கு 39ஆவது தடவையாக வந்துஉங்களைச்சந்திக்கிறேன். இந்த நாட்டில் ஏனையஇனமக்கள் எதையாவது கோரிப்போராடினால் ஒரிரு நாட்களுள் அரசாங்கம் தீர்வைவழங்கிவிடும். ஆனால் தமிழ்மக்கள் மட்டும் வருடக்கணக்கில் உய்மையாகப்போராடினாலும் தீர்வு இழுத்தடிக்கப்பட்டுவ ருகிறது. இது வேதனைக்குரியது.

இதற்கு என்னகாரணம்? அரசாங்கம் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா? அல்லதுதமிழ்த்தலைமைகளின் பொடுபோக்குத்தனமா? என்பதுபுரியாமலுள்ளது.

அம்பாறைமாவட்டத்தமிழர்கள்எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவ்வாறு தீர்வு இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேசசெயலகதரமுயர்த்தல்விவகாரம் வட்டமடுப்பிரச்சினை மல்லிகைத்தீவு நச்சுநீர் விவகாரம் தொட்டாச்சுருங்கிவட்டைப்பிரச்சினை அதேபோல் கனகர்கிராம காணிமீட்புப்போராட்டம் போன்ற எந்தவொரு பிரச்சினைக்கும்தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

இன்று நாட்டில் ஜனாதிபதிதேர்தல்பற்றி அனல்பறக்கும் கதைகள் தினம் தினம்ஊடகங்களில் வலம்வருகின்றன. மஹிந்தவா? ரணிலா? யாருக்கு வாக்களிப்பது? ஜ.நா.தீர்வை அமுல்படுத்துபவருக்கு தமிழ்மக்கள்வாக்களிப்பார்கள் ;என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இங்கு தமிழ்ப்பெண்கள்வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு போராடிவருவது அவர்கள்கண்களுக்குத் தெரியவில்லை. தாம்பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தையே கேட்கிறார்கள். தவிர மாற்றான் காணியையோ அரசகாணியையோ கேட்கவில்லை.

இங்கு நீங்கள் சொல்கின்ற கருத்துக்களைக்கேட்கின்றபோது தமிழ்த்தலைமைகள்கூட உங்களை ஏறெடுத்தும்பார்க்காதநிலை இருப்பதாகத்தெரிகிறது. நேற்று இப்பிரதேசத்திற்கு வந்த தமிழ்த்தலைமைகள் இங்குவரவில்லை என்றுஆதங்கப்பட்டீர்கள்.
காணியே இன்னும் விடுவிக்கப்படாதநிலையில் இங்கு 150வீடுகளை கட்டப்போகிறார்களாம். என்னசெய்வது தமிழரின் தலைவிதி இவ்வாறான கதைகளெல்லாம் கேட்பதற்கு..

நான்மக்களுக்குச்சேவை செய்யவே அரசியலுக்குவந்தேன். ஆனால் இப்போது சிந்திக்கிறேன். என்னால் மக்களை ஏமாற்றமுடியாது.
இந்த நல்லாட்சியைக்கொண்டுவர தமிழ்மக்களின் பங்களிப்பை அனைவரும் அறிவார்கள். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என தமிழ்மக்கள் நினைத்தார்கள். அதன்பலாபலனே அது. யாரும் சொல்லி வாக்களிக்கும் நிலையில் தமிழ்மக்கள்இன்றில்லை.
அதேபோலத்தான்இன்றைய ஜனாதிபதித்தேர்தலிலும் யாரைக்கொண்டுவரவேண்டும் என தமிழ்மக்கள் தீர்மானிப்பார்கள். அதன்படி அது நடக்கும். ஒன்றில் பேய் அல்லது பிசாசு.அவ்வளவுதான்.

நல்லாட்சிஜனாதிபதி தமிழ்மக்களுக்கு செய்த கைங்கரியத்தை நாமறிவோம். எனவே சிந்தித்துச்செயற்படுவோம்.இனியும் யாரும் ஏமாற்றாமல் சுயபுத்தியுடன் செயற்படுவோம்.என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -