இன்று கல்முனையில் 76நிலையங்களில் புலமைப்பரிசில்பரீட்சை!


காரைதீவு நிருபர் சகா-
லங்கைபரீட்சைகள் திணைக்களம் இன்று(4) ஞாயிற்றுக்கிழமை காலை நாடளாவியரீதியில் நடாத்தும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கல்முனைக்கல்வி மாவட்டத்தில் 76பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய நான்கு கல்வி வலயங்களைச்சேர்ந்த தரம்5 மாணவர்கள் இப்பரீட்சைக்குத்தோற்றுகின்றனர்.

கிழக்கு மாகாணகல்வித்திணைக்களம் இம்முறைபரீட்சைக்குத்தோற்றும் மாணவர்அனைவருக்கும் இரண்டு முன்னோடிப்பரீட்சைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை உயர்தரப்பரீட்சை 69நிலையங்களில் ஆரம்பம்!

இதேவேளை நாளை(5) திங்கட்கிழமை நாடளாவியரீதியில் ஆரம்பமாகும் க.பொ.த.உயர்தரப்பரீட்சை கல்முனைக்கல்விமாவட்டத்தில் 69பரீட்சை நிலையங்களில் நடைபெறஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதில் பழையபாடத்திட்டத்திற்கான பரீட்சார்த்திகளுக்கு 35பரீட்சை நிலையங்களும் புதியபாடத்திட்டப்பரீட்சார்த்திகளுக்கு 34பரீட்சை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பிராந்திய இணைப்புநிலையம் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிமனையில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -